ஐபிஎல்: டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு..!
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி,
16வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி சென்னை தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. தனது முதல் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி இருந்த குஜராத் 2வது வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் உள்ளது.
அதேவேளையில், தனது முதல் ஆட்டத்தில் லக்னோவிடம் வீழ்ந்த டெல்லி முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்.