ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்; ஷாருக்கான் - விராட் கோலி சந்திப்பு


ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்; ஷாருக்கான் - விராட் கோலி சந்திப்பு
x

விராட் கோலிக்கு ஷாருக்கான் நடனமாட சொல்லிக் கொடுத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு,

ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரூ அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 204 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியை நடிகர் ஷாருக்கான் அவரது மகள் மற்றும் பாப் பாடகர் உஷா உதுப் ஆகியோர் நேரில் சென்று ரசித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான் மைதானத்துக்குள் சென்று கொல்கத்தா வீரர்களை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்தார். மேலும் பெங்களூர் அணி வீரரும் இந்திய வீரருமான விராட் கோலியையும் சந்தித்து பேசினார். சந்தித்து பேசியது மட்டுமல்லாமல் நடனமாடியும் மகிழ்ந்தார். அதில் விராட் கோலிக்கு ஷாருக்கான் நடனமாட சொல்லிக் கொடுத்தார். அதனையடுத்து விராட் கோலியின் கையில் ஷாருக்கான் முத்தமிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது.



Next Story