நடப்பு ஐ.பி.எல். தொடருக்கு திரும்புகிறாரா சி.எஸ்.கே.வீரர் கான்வே..? வெளியான தகவல்


நடப்பு ஐ.பி.எல். தொடருக்கு திரும்புகிறாரா சி.எஸ்.கே.வீரர் கான்வே..?  வெளியான தகவல்
x

image courtesy: PTI

சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக இடம்பெற்றிருந்த டேவான் கான்வே காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். சீசனில் இதுவரை பங்கேற்கவில்லை.

வெலிங்டன்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகள் கண்டு புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

நடப்பு ஐ.பி.எல். சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரரான டேவான் கான்வே காயம் காரணமாக இந்த சீசனில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. கால் விரலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சைக்கு பின், அவர் குணமடைய குறைந்தது 8 வாரங்கள் ஆகலாம் என தகவல் வெளியாகியது. இதனால் அவர் ஐ.பி.எல். மட்டுமின்றி மே மாதம் வரை எந்த வித போட்டிகளிலும் பங்கேற்காத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் அவர் மே மாத 2-வது வாரத்திற்குள் முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவ்வேளையில்தான் நடப்பு ஐ.பி.எல். சீசனில் பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால் ஒருவேளை சி.எஸ்.கே. பிளே ஆப் சுற்றினை எட்டிவிட்டால் இவர் மீண்டும் சென்னை அணியுடன் இணைந்து விளையாடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story