2023 ஐபிஎல் தொடருடன் தோனி ஒய்வு ? ரோகித் சர்மா ஓபன் டாக்...
சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது
மும்பை ,
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன .இந்த போட்டிக்காக அணைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போட்டி சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் சென்னை அணியின் போட்டிகளை ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தோனி இன்னும் 2-3 சீசன் வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என இந்திய அணியின் கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா கூறியுள்ளார்.
தோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கும் என்று கடந்த 2-3 ஆண்டுகளாக நான் கேள்விப்பட்டு வருகிறேன். இன்னும் சில சீசன்களில் விளையாடும் அளவுக்கு அவர் உடற்தகுதியுடன் இருக்கிறார் .என்று ரோகித் சர்மா கூறினார்.