ஜாலியோ ஜிம்கானா...! புதிய லுக்கில் தோனியின் உற்சாக நடனம்...வைரல் வீடியோ


ஜாலியோ ஜிம்கானா...! புதிய லுக்கில் தோனியின் உற்சாக நடனம்...வைரல் வீடியோ
x

தோனி உள்பட 4 வீரர்கள் நடனமாடுவது போல உள்ள வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

16-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தீவிரமாக வலை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். வரும் 31-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்-ன் பீஸ்ட் பட பாடலுக்கு தோனி உள்பட 4 வீரர்கள் நடனமாடுவது போல உள்ள வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் தோனி கித்தார் வாசிப்பது போன்றும் அருகில் ருதுராஜ், சிவன் துபே, தீபக் சாஹர் ஆகியோர் நடனமாடுவது போன்று இருந்தது.


Next Story