தூங்கவிட மாட்றாங்கப்பா...! லபுசேன் தூக்கத்தை கலைத்த சிராஜ்..! வைரல் வீடியோ


தூங்கவிட மாட்றாங்கப்பா...! லபுசேன் தூக்கத்தை கலைத்த சிராஜ்..! வைரல் வீடியோ
x
தினத்தந்தி 9 Jun 2023 8:11 PM IST (Updated: 9 Jun 2023 8:17 PM IST)
t-max-icont-min-icon

லபுசேன் உடனடியாக விழித்துக்கொண்டு பேட்டிங் செய்ய களமிறங்கினார்.

ஓவல் ,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியாலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 29 ரன்களும், கே.எஸ். பரத் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எஸ். பரத் இன்று ரன் கணக்கை தொடங்காமல் நேற்றைய ரன்னிலேயே வெளியேறினார்.

அடுத்து ரகானே உடன் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். ஷர்துல் தாகூர் முதலில் உடலில் அடி வாங்கினார். நேரம் செல்ல செல்ல சுதாரித்து விளையாட ஆரம்பினார். மறுமுனையில் ரகானே சிறப்பாக விளையாடினார். அவர் 92 பந்தில் அரைசதம் அடித்தார். இன்று ஆஸ்திரேலியாவின் பீல்டிங் சிறப்பாக அமையவில்லை. 4 கேட்ச்களை தவறவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் எல்.பி.டபிள்யூ. ஆகிய பந்து நோ-பால் ஆக வீசப்பட்டதால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரகானே 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் , ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்து 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், உமேஷ் யாதவ் 5 ரன்களுக்கு , ஷமி 13 ரன்களுக்கு வெளியேறினர்.இதனால் இந்தியா 296 ரன்னுக்கு ஆட்டமிழந்தது

ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட் , ஸ்டார்க் , போலண்ட் , கிரீன் தலா 2 விக்கெட் , நாதன் லியோன் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

தொடக்க வீரர்களாக வார்னர் , கவாஜா களமிறங்கினர். தொடக்கத்தில் வார்னர் சிராஜ் பந்துவீச்சில் 1ரன்களில் ஆட்டமிழந்தார்.

வார்னர் ஆட்டமிழக்கும் முன் அடுத்து களமிறங்க இருந்த மார்னஸ் லபுசேன் ஓய்வறையில் அசந்து தூங்கும் காட்சிகள் காட்டப்பட்டது. ஆனால் அவர் தூங்கி கொண்டிருக்கும் போதே சிராஜ் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார்.இதனால் இந்திய ரசிகர்களின் உற்சாகம் விண்ணை தொட்டது. ரசிகர்களின் கரகோஷத்தால் எழுந்த லபுஷேன், டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததை பார்த்து உடனடியாக பேட்டிங் செய்ய களமிறங்கினார்


இதனால் லபுசேன் உடனடியாக விழித்துக்கொண்டு பேட்டிங் செய்ய களமிறங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story