கடைசி டி20: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து


கடைசி டி20: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
x

நியூசிலாந்து அணி 14 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

தி ஹாக்,

நியூசிலாந்து அணி நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீட் 53 ரன்களும், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ஸ் தலா 26 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது.

அந்த அணி 14 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் சாண்ட்னர் 77 ரன்களும், டேரில் மிட்சேல் 51 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.


Next Story