கடைசி டி20: சூர்யகுமார் யாதவ் அரைசதம்..! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா


கடைசி  டி20: சூர்யகுமார் யாதவ் அரைசதம்..! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 166  ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
x

இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 165 ரன்கள் எடுத்தது

லாடெர்ஹில்,

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நேற்று இரவு நடந்தது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது . டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் ,சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கும் , கில் 9 ரன்களுக்கும் அகேல் ஹொசைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் , திலக் வர்மா இணைந்து சிறப்பாக விளையாடினர். 27 ரன்கள் எடுத்த நிலையில் திலக் வர்மா ரோஸ்டன் சேஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.

தொடர்ந்து சஞ்சு சாம்சன் 13 ரன்கள் , ஹர்திக் பாண்டியா 14 ரன்கள் எடுத்து ரோமெரோ ஷெப்பர்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். மறுபுறம் சூர்யகுமார் யாதவ் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். அவர் அரைசதம் அடித்த பின்னர் 45 பந்துகளில்;61 ரன்கள் எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 165 ரன்கள் எடுத்தது

. .


Next Story