கடைசி டி20 : பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து திரில் வெற்றி


கடைசி டி20 : பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து திரில் வெற்றி
x

20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது

குயின்ஸ்டவுன்,

நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று குயின்ஸ் டவுனில் நடந்தது. டாஸ் ஜெயித்து நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. குசல் மென்டிஸ் 48 பந்தில் 73 ரன்கள் எடுத்தார். குசல் பெரைரா 33 ரன்னும், நிசாங்கா 25 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டிம் செய்பர்ட் சிறப்பாக விளையாடினார். அவர் 48 பந்தில் 88 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். கேப்டன் டாம் லதாம் 31 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. குமாரா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து சாப்மேன், அடுத்த பந்தில் அவுட் ஆனார். 3-வது பந்தில் ஜேமி நிசமும் (ரன் அவுட்), மிட்செல்லும் கேட்ச்) அவுட் ஆனார்கள். அடுத்த இரண்டு பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது. நியூசிலாந்து 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது


Related Tags :
Next Story