நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து 360 ரன்னில் ஆல்-அவுட்


நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து 360 ரன்னில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 26 Jun 2022 12:32 AM GMT (Updated: 2022-06-26T06:10:20+05:30)

2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.

லீட்ஸ்,

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 329 ரன்னில் ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 55 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த போதிலும் ஜானி பேர்ஸ்டோவும், அறிமுக வீரர் ஜாமி ஓவர்டானும் இணைந்து அதிரடியாக விளையாடி அணியை தூக்கி நிறுத்தினர்.

2-வது நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோ 130 ரன்களுடனும், ஓவர்டான் 89 ரன்களும் களத்தில் இருந்தனர். 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து 67 ஓவர்களில் 360 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. பேர்ஸ்டோ 162 ரன்களிலும் (157 பந்து, 24 பவுண்டரி), ஓவர்டான் 97 ரன்களிலும் (13 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்கள்.

கடைசி கட்டத்தில் அணியின் முன்னிலைக்கு உதவிய ஸ்டூவர்ட் பிராட் 42 ரன்கள் (36 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். அடுத்து 31 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story