நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்; இங்கிலாந்து அணிக்கு 296 ரன்கள் இலக்கு


நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்; இங்கிலாந்து அணிக்கு 296 ரன்கள் இலக்கு
x

4-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 105.2 ஓவர்களில் 326 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

லீட்ஸ்,

இங்கிலாந்து - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 329 ரன்களும், இங்கிலாந்து 360 ரன்களும் எடுத்தன. 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது.

4-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 105.2 ஓவர்களில் 326 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. டேரில் மிட்செல் 56 ரன்களும், டாம் பிளன்டெல் 88 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். முதல் இன்னிங்ஸ் போலவே இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் இந்த இன்னிங்சிலும் 5 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 296 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது. 35 ஓவர் முடிந்திருந்த போது 2 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது.

இதற்கிடையே, இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் கொரோனா தொற்றால் பாதியில் விலகி இருக்கிறார். கொரோனா மாற்று வீரர் விதிமுறைப்படி அவருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story