பந்து வீச தாமதம்: லக்னோ கேப்டனுக்கு அபராதம்.!


பந்து வீச தாமதம்: லக்னோ கேப்டனுக்கு அபராதம்.!
x

தாமதமாக பந்துவீசியதாக லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுலுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது.

இந்த ஆட்டத்தில் லக்னோஅணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. தாமதமாக பந்து வீசியது தெரியவந்ததால், கேப்டன் என்ற முறையில் லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுலுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.


Next Story