லைவ் அப்டேட் டெஸ்ட் - 3வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் முன்னிலை...!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 163 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்னும் குவித்தனர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 151 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கி உள்ளது.
Live Updates
- 9 Jun 2023 10:34 PM IST
3வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் முன்னிலை
3வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் முன்னிலை...!
- 9 Jun 2023 10:03 PM IST
அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கினார் ஜடேஜா...!
அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்டை 18 ரன்னில் அவுட்டாக்கினார் ரவீந்திர ஜடேஜா.
- 9 Jun 2023 9:33 PM IST
ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா...!
நிலைத்து நின்று ஆடிகொண்டிருந்த ஸ்மித்தின் ( 34 ரன்) விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார்.
- 9 Jun 2023 9:28 PM IST
விக்கெட் வீழ்த்த முடியாமல் தவிக்கும் இந்திய பவுலர்கள்...!
3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்மித்-லபுஸ்சாக்னே இணை 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. மேலும் இதுவரை ஆஸ்திரேலியா 259 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- 9 Jun 2023 9:04 PM IST
பொறுமையாக ஆடி வரும் ஸ்மித் மற்றும் லபுஸ்சாக்னே...!
ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஸ்சாக்னே ஆகியோர் பொறுமையாக ஆடி வருகின்றனர்.
- 9 Jun 2023 8:44 PM IST
ஆஸி. 2வது இன்னிங்ஸ் - 20 ஓவர் முடிவில் 51/2
ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சில் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை மொத்தமாக 224 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- 9 Jun 2023 8:24 PM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: வலுவான நிலையை நோக்கி செல்லும் ஆஸ்திரேலியா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469- ரன்களுக்கு அவுட் ஆனது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 296- ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பின்னர் 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 15 ஒவர்கள் நிலவரப்படி 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. 204 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் 8 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் அந்த அணி தற்போதைய நிலையை வைத்து பார்த்தால் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சவாலான ஸ்கோரை நிர்ணையிக்கும் எனத் தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியாவின் கையே இந்த டெஸ்ட்டில் ஓங்கியுள்ளது.
- 9 Jun 2023 8:20 PM IST
இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்பிய கவாஜா
39 பந்தில் 13 ரன் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.