இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா பாதிப்பு..!!


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா பாதிப்பு..!!
x

கோப்புப்படம்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20-ஆம் தேதி மொகாலியில் தொடங்குகிறது. நாக்பூரில் 2-வது போட்டி 23-ஆம் தேதியும், இறுதி மற்றும் 3-வது போட்டி 25 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஷமி விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க்கப்பட்டு உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

உமேஷ் யாதவ் தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் டி20ஐ விளையாடுவதற்கான அணியில் இடம்பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வப்போது அவர் இடம்பெற்ற போதிலும், ஐபிஎல்-ல் தொடர்ந்து உமேஷ் யாதவ் பங்கேற்று வருகிரார். கடந்த சீசனில் பவர்பிளேயில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக உமேஷ் யாதவ் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story