சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்: ரோகித் சர்மாவை முந்தினார் கப்தில்


சர்வதேச டி-20  கிரிக்கெட்டில் அதிக ரன்: ரோகித் சர்மாவை முந்தினார் கப்தில்
x

சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரோகித் சர்மாவை மார்ட்டின் கப்தில் பின்னுக்கு தள்ளினார்.

எடின்பர்க்,

ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு இரண்டு 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி ஒன்றில் விளையாடுகிறது. நியூசிலாந்து-ஸ்காட்லாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி எடின்பர்க் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. பின் ஆலென் சதம் (101 ரன், 56 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) அடித்தார். தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 40 ரன்கள் விளாசினார்.

முன்னதாக கப்தில் 21 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளினார். 35 வயதான கப்தில் இதுவரை 116 இருபது ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி 2 சதம், 20 அரைசதம் உள்பட 3,399 ரன்கள் எடுத்துள்ளார். 2-வது, 3-வது இடங்களில் முறையே இந்தியாவின் ரோகித் சர்மா (3,379 ரன்), விராட் கோலி (3,308 ரன்) ஆகியோர் உள்ளனர்.


Next Story