கடைசி ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து..!


கடைசி ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து..!
x

கடைசி ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி தொடரை வென்றது.

கராச்சி,

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 280 ரன்கள் சேர்த்தது.

தனது 8-வது சதத்தை பூர்த்தி செய்த பஹர் ஜமான் 101 ரன்களிலும் (122 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 77 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் பாபர் அசாம் 4 ரன்னில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இந்த தொடரில் 3 ஆட்டத்திலும் பாபர் அசாம் ஸ்டம்பிங் ஆனது நினைவு கூரத்தக்கது.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை பெற்றது. டிவான் கான்வே (52 ரன்), கேப்டன் கேன் வில்லியம்சன் (53 ரன்), கிளென் பிலிப்ஸ் (63 ரன், 42 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) அரைசதம் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பாகிஸ்தான் மண்ணில் நியூசிலாந்து அணி ஒரு நாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும்.


Next Story