யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை : சுப்மன் கில்


யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை :  சுப்மன் கில்
x

Image Courtesy : BCCI /IPL 

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது

கொல்கத்தா,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய குஜராத் 3 பந்துகள் மீதம் இருக்க 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.அந்த அணியின் மில்லர் 38 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தார் .குஜராத் அணியின் சுப்மன் கில் இந்த போட்டியில் 35 ரன்கள் எடுத்தார் .

இந்நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய குஜராத் அணியின் சுப்மன் கில் கூறியதாவது ;

"கொல்கத்தா எனக்கு எப்போதுமே அருமையாக இருந்துள்ளது , சாஹா அவுட் ஆன பிறகு, நாங்கள் பவர்பிளேயில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றோம், நாங்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதில் மகிழ்ச்சி நாங்கள் அனைவரும் எங்கள் கிரிக்கெட்டை மிகவும் ரசிக்கிறோம்."

எனக்கு எந்த கூடுதல் அழுத்தமும் இல்லை, , ஏனென்றால் எனது முந்தைய அணிக்காக (கொல்கத்தா) நான் சிறப்பாக செயல்பட்டேன், நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை, எனது அணிக்கு நான் பங்களிக்க வேண்டியிருந்தது. இவ்வாறு கூறினார் .


Related Tags :
Next Story