பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : நோவக் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : நோவக் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image Courtesy : AFP 

3வது சுற்றில் ஜோகோவிச் உலகின் 195ம் நிலை வீரரான அல்ஜாஸ் பெடனை எதிர்கொள்கிறார்.

பாரிஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஒன்றில் தரவரிசையில் முதல் நிலை வீரராக உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஸ்லோவாக்கியாவின் அலெக்ஸ் மோல்கனை 6-2, 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்றார்.

இந்த வார இறுதியில் நடக்கும் 3வது சுற்றில் அவர் உலகின் 195ம் நிலை வீரரான அல்ஜாஸ் பெடனை எதிர்கொள்கிறார்.


Next Story