தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு...!!
தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க்,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை ஓயிட்வாஷ் செய்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. அதற்கான டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து 2 ஓவர்கள் முடிவில் 2 ரன்களுடன் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-
தென்னாப்பிரிக்கா : குயின்டன் டி காக், டெம்பா பவுமா(கேப்டன்), ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ்(கேப்டன்), கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், ஆஷ்டன் அகர், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.