வெ.இண்டீஸ்- இந்தியா இடையிலான ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தம்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளது.
பிரிட்ஜ்டவுன்,
வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா , விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா செயல்படுகிறார். இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், இஷான் கிஷனும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இஷான் கிஷன் அரைசதம் அடித்து 55 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 34 ரன்கள் எடுத்தார்.
ஆனால் அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் வருவரும் போவதுமாய் இருந்தனர். சாம்சன்(9), அக்சர் படேல்(1), ஹர்திக் பாண்ட்யா(7), அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 24.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தடைபட்டுள்ளது. மழை நின்றபிறகு போட்டி தொடங்கவுள்ளது.