வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி 'ஹாட்ரிக்' வெற்றி


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றி
x

image courtesy: Pakistan Cricket twitter

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

முல்தான்,

பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி முல்தானில் நேற்று முன்தினம் பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷதாப் கான் 86 ரன்னும், இமாம் உல்-ஹக் 62 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் நிகோலஸ் பூரன் 4 விக்கெட்டும், கீமோ பால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 37.2 ஓவர்களில் 216 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும்.

அதிகபட்சமாக அகீல் ஹூசைன் 60 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷதாப் கான் 4 விக்கெட்டும், ஹசன் அலி, முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி வீரர்கள் ஷதாப் கான் ஆட்டநாயகன் விருதையும், இமாம் உல்-ஹக் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.


Next Story