2023 உலகக்கோப்பை : பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடத்த திட்டம்
பாகிஸ்தான் விளையாடும் ஆட்டத்தை சென்னை , மற்றும் கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை,
இந்தியாவில் இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.இந்த தொடர் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உலக கோப்பை நடைபெறும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
போட்டிக்காக ,பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மஷாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை. ஆகிய இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன . தொடரில் 46 நாட்களில் 48 போட்டிகள் நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி தற்காலிகமாகத் தொடங்கும், இதில் 46 போட்டிகள் அடங்கும், இதில் இறுதிப் போட்டி அகமதாபாத், லக்னோ, மும்பை, ராஜ்கோட், பெங்களூரு, டெல்லி, இந்தூர், குவஹாத்தி மற்றும் ஹைதராபாத், தர்மசாலா உட்பட 12 இந்திய நகரங்களில் நடைபெறும்.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் போட்டிகளை சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஆசிய கோப்பைக்காக பிசிசிஐ இந்தியஅணியை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்றால், உலகக் கோப்பை போட்டிகளுக்காக இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என்றும் ,. பாகிஸ்தான் விளையாடும் உலகக் கோப்பை போட்டியை இலங்கை அல்லது வங்காளதேசத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.
இதனால் இந்தியாவில் பாகிஸ்தான் விளையாட உள்ளது அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது..
ஒருவேளை உலகக்கோப்பை , இந்தியாவில் பாகிஸ்தான் விளையாட சம்மதம் தெரிவித்துவிட்டால் பாகிஸ்தான் விளையாடும்ஆட்டத்தை சென்னை , மற்றும் கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.