11 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சென்னை வருகை.!


11 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சென்னை வருகை.!
x
தினத்தந்தி 21 Oct 2023 5:21 PM IST (Updated: 21 Oct 2023 5:49 PM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட பாகிஸ்தான் அணியினர் சென்னை வந்தடைந்தனர்.

சென்னை,

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இருநாட்டு தொடர்களில் விளையாடாமல் இருந்துவரும் சூழலில், ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர்களில் மட்டும் இரு அணிகளும் மோதி வருகின்றன.

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அணி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருவரை 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்திற்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் இன்று சென்னைக்கு வந்தடைந்தனர்.

11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்துள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். நடப்பு உலகக்கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐதராபாத், அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு சென்றபோது, அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story