டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் மிகவும் ஆபத்தான வீரர் - ரிக்கி பாண்டிங் புகழாரம்


டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் மிகவும் ஆபத்தான வீரர் - ரிக்கி பாண்டிங் புகழாரம்
x

டி20 உலகக்கோப்பையின் போது ரிஷப் பண்ட் மிகவும் ஆபத்தான வீரர் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

மும்பை,

டி20 உலகக்கோப்பை இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் மாதம் போட்டிகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரிவ்யூ என்ற நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் டெல்லி அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரருமான ரிஷப் பண்ட் குறித்த ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாண்டிங் கூறுகையில், ரிஷப் பண்ட் மிகவும் சிறப்பான வீரர். உலகை தன் காலடியில் வைத்திருக்கக்கூடிய மிகவும் சிறப்பான இளைஞர். உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் தட்டையான, வேகமான மற்றும் துள்ளும் (பவுண்சி) ஆஸ்திரேலிய மைதானங்களில் இந்தியா அணி சார்பில் விளையாடும் ரிஷப் பண்ட் மிகவும் ஆபத்தான வீரர். ரிஷப் பண்டை இந்தியா மிதவை போன்று பயன்படுத்த வேண்டும். இந்திய பேட்டிங் தரவரிசையில் ரிஷப் பண்ட்டை நானாக இருந்தால் 5 வது இடத்தில் களமிறக்குவேன்' என்றார்.


Next Story