பவித்சிங் நாயர் நினைவு கிரிக்கெட் போட்டி: எத்திராஜ், விவேகானந்தா அணிகள் 'சாம்பியன்'


பவித்சிங் நாயர் நினைவு கிரிக்கெட் போட்டி: எத்திராஜ், விவேகானந்தா அணிகள் சாம்பியன்
x

பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற எத்திராஜ் கல்லூரி அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.

சென்னை,

குருநானக் கல்லூரி சார்பில் 9-வது பவித்சிங் நாயர் நினைவு அகில இந்திய கல்லூரிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் ஆர்.கே.எம். விவேகானந்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் குருநானக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதலில் ஆடிய குருநானக் அணி 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய விவேகானந்தா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது.

பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் எத்திராஜ் கல்லூரி 6 விக்கெட் வித்தியாசத்தில் குருநானக்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. தொடரின் சிறந்த வீரராக ஹர்ஷ்வர்தன் சாயும் (விவேகானந்தா), சிறந்த வீராங்கனையாக சுபா ஹரினியும் (எத்திராஜ்) தேர்வு செய்யப்பட்டனர். பரிசளிப்பு விழாவில் எம்.ஆர்.எப். வேகப்பந்து வீச்சு அறக்கட்டளை தலைமை பயிற்சியாளர் எம்.செந்தில் நாதன், இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.


Next Story