விராட் கோலியின் வித்தியாசமான டுவிட்டர் பதிவு - விமர்சனங்களுக்கு பதிலடியா..?


விராட் கோலியின் வித்தியாசமான டுவிட்டர் பதிவு - விமர்சனங்களுக்கு பதிலடியா..?
x

அவருடைய டுவிட்டர் பதிவில், இரண்டு சிறகுகள் கொண்ட ஒரு கலைப் படைப்பின் முன் கோலி போஸ் கொடுப்பதைக் காணலாம்.

லண்டன்,

டெஸ்ட், ஒருநாள், டி20 என்று அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு பல வெற்றிகளை குவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முன்னாள் சர்வதேச போட்டிகளில் சதம் எதுவும் அடிக்கவில்லை.

அவர் சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் அவரை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள். மேலும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவர் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுக்க பரிந்துரைத்துள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். பார்மின்றி தவிக்கும் விராட்கோலியை 20 ஓவர் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் விராட் கோலி, வித்தியாசமான பதிவை டுவீட் செய்துள்ளார். அவருடைய டுவிட்டர் பதிவில், இரண்டு சிறகுகள் கொண்ட ஒரு கலைப் படைப்பின் முன் கோலி போஸ் கொடுப்பதைக் காணலாம்.

அந்த படத்தில் எழுதியிருக்கும் வசனம், "நான் விழுந்தால் என்ன... ஓ ஆனால் என் அன்பே, நீ பறந்தால் என்ன". இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ள கோலி, "கண்ணோட்டம்" என்ற வார்த்தையை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தரும் விதமாக கோலி பதிவிட்டுள்ளார் என்று பலரும் கூறுகின்றனர்.


Next Story