தன்னை ஒரு நட்சத்திரம் என்றும் யாரும் தொடமுடியாது என்றும் பிரித்விஷா நினைக்கிறார் - சுப்மன் கில் இளம்வயது பயிற்சியாளர்...!


தன்னை ஒரு நட்சத்திரம் என்றும் யாரும் தொடமுடியாது என்றும் பிரித்விஷா நினைக்கிறார் - சுப்மன் கில் இளம்வயது பயிற்சியாளர்...!
x

தான் ஒரு நட்சத்திர வீரர் என்றும், தன்னை யாராலும் தொட முடியாது என்றும் பிரித்வி ஷா நினைத்தார் என சுப்மன் கில்லின் இளம் வயது பயிற்சியாளர் கூறியுள்ளார்.

டெல்லி,

2018-ல் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதில், இந்திய அணியில் பிரித்வி ஷா மற்றும் சுப்மன் கில் இருவரும் இடம்பெற்றிருந்தனர்.

ஐபிஎல் தொடரில் தற்போது பிரித்வி ஷா டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும், சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.

சுப்மன் கில் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 16 போட்டியில் விளையாடி 3 சதங்கள் உட்பட 851 ரன்கள் குவித்துள்ளார். ஆனால் பிரித்வி ஷா 8 போட்டிகளில் விளையாடி 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்நிலையில், சுப்மன் கில்லின் இளம் வயது பயிற்சியாளரான கர்சன் காவ்ரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'தான் ஒரு நட்சத்திர வீரர் என்றும், தன்னை யாராலும் தொட முடியாது என்றும் பிரித்வி ஷா நினைத்தார். ஆனால், 20 ஒவர், 50 ஒவர், டெஸ்ட் போட்டி அல்லது ரஞ்சிக்கோப்பை போன்ற எந்த போட்டியினாலும் அவுட் ஆக ஒரு பந்து போதும் என்பதை பிரித்வி ஷா புரிந்து கொள்ள வேண்டும்.

சுப்மன் கில் தனது தவறுகளை திருத்திக்கொள்வதால் அவர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துகிறார். ஆனால் பிரித்வி ஷா-வோ அதனை செய்வதில்லை. இன்னும் எதுவும் பறிபோகவில்லை. இருவருக்கும் ஒரே வயதுதான் பிரித்வி ஷா தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்' என்று அவர் கூறினார்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரராக சுப்மன் கில் களம் இறங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story