வான்கடேவில் வானவேடிக்கை காட்டிய பஞ்சாப்..! 214 ரன்கள் குவிப்பு
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 214 ரன்கள் குவித்தது.
மும்பை ,
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமயிலான மும்பை அணியும் , சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி அந்த பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக மேத்யூ ஷார்ட் , பிரப் சிம்ரன் சிங் களமிறங்கினர். தொடக்கத்தில் மேத்யூ ஷார்ட் 11 ரன்களில் கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிரப் சிம்ரன் சிங் 26 ரன்களில் அர்ஜுன் தெண்டுல்கர் ஓவரில் வெளியேறினார்.
தொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டன் 10 ரன்களும் , அதர்வ தைடே 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து ஹரிபிரீத் சிங் , சாம் கரன்'இருவரும் இனைந்து மும்பை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அர்ஜுன் தெண்டுல்கர் வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரி , 2 சிக்ஸர்கள் பறக்க விட்டனர்.
சிறப்பாக'விளையாடிய ஹர்பிரீத் சிங் 28 பந்துகளில் 41 ரன்களுக்கு கிரீன் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜிதேஷ் ஷர்மா களமிறங்கினார்,
கிரீன் வீசிய அந்த ஓவரில் சாம் கரன் 2சிக்சரும் , ஜிதேஷ் சர்மா 2 சிக்ஸர்கள் பறக்க விட்டனர்.அதிரடி காட்டிய சாம் கரன் அரைசதம் அடித்தார்.அவர் 29 பந்துகளில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்,மறுபுறம் சிக்ஸர்கள் பறக்க விட்ட ஜிதேஷ் ஷர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 214 ரன்கள் குவித்தது.தொடர்ந்து 215ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடுகிறது.