ரிஷப் பண்ட், ரோகித் சர்மா உடல்தகுதி குறித்து விமர்சித்த பாக். முன்னாள் வீரர்


ரிஷப் பண்ட், ரோகித் சர்மா உடல்தகுதி குறித்து விமர்சித்த பாக். முன்னாள் வீரர்
x

கோப்புப்படம் 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா, ரிஷப் பந்த், ரோகித் சர்மா உடல்தகுதி குறித்து விமர்சித்துள்ளார்

கராச்சி,

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. கீப்பிங்கில் சரியாக செயல்படுவதில்லை. பேட்டிங்கில் அவரது சாட் தேர்வு தவறாக உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங் கவலை அளிக்கும் விதத்தில் இருந்தது. இவரையடுத்து ரோகித் சர்மாவும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ரோகித் சர்மா உடல்தகுதி குறித்து விமர்சித்துள்ளார். இது குறித்து டேனிஷ் கனேரியா கூறியதாவது:- டேனிஷ் கனேரியா ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி சராசரியை விட குறைவாக உள்ளது. இது என்னோட கருத்து. கோலி கேப்டனாக பொறுப்பேற்றதும், அணியின் உடற்தகுதி தேவைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. ஆனால் மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் போது ரிஷப் பண்ட் பின்தங்கியே உள்ளார்.

ரோகித் ஷர்மா பெரிய அளவில் பார்மில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு பேட்ஸ்மேன் என்பதால் அவருக்குப் பரவாயில்லை. இருப்பினும், ஒரு விக்கெட் கீப்பராக பண்ட் தனது உடல் தகுதியை அதிகரிக்க வேண்டும். இளம் வீரரான ரிஷப் பண்ட் சமீபகால ஆட்டங்களில் சரியாக குனிந்து நிமிர முடியவில்லை என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவரது உடல் எடை பிரச்சினையே இதற்கு காரணமாகும். மன உறுதியையும் முதிர்ச்சியையும் வளர்ப்பதற்கான ஒரே வழி உடற்தகுதியாகும். இவ்வாறு டேனிஷ் கனேரியா கூறினார்.


Next Story