ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்..- மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார் ரோகித் சர்மா..!


ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்..- மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார் ரோகித் சர்மா..!
x
தினத்தந்தி 6 May 2023 4:19 PM IST (Updated: 6 May 2023 4:28 PM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு எதிராக இன்று நடைபெற்றுவரும் போட்டியில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார்.

சென்னை,

ஐபிஎல் லீக் சுற்றில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் சென்னை- மும்பை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அனி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.

இந்த போட்டியில் தொடக்க வீரரும், மும்பை அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். 5 பந்துகள் மட்டும் சந்தித்த அவர் தீபர் சாகர் பந்துவீச்சில் ஜடேஜா வசம் கேட்சாகி அவுட்டானார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரரானார். அவர் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

இந்த வரிசையில் சுனில் நரேன், தினேஷ் கார்த்திக் மற்றும் மந்தீப் சிங் (தலா 15), அம்பத்தி ராயுடு (14),

ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, மேக்ஸ்வெல், பார்த்தீவ் படேல், ரகானே, மனீஷ் பாண்டே(தலா 13 முறை),

கவுதம் கம்பீர்(12 முறை), அஸ்வின், டி வில்லியர்ஸ், வார்னர், கோலி ஆகியோர் (தலா 10) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.


Next Story