உச்சகட்ட பரபரப்பு..! டெல்லியை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றி
மும்பை அணி முதல் வெற்றி பெற்றது
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில், டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா , டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஷா 15 ரன்களில் வெளியேறினார். பின்னர் வார்னர், மனிஷ் பாண்டே இணைந்து சிறப்பாக விளையாடினர்.பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய மனிஷ் பாண்டே 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த யாஷ் துல் 2ரன்கள்,ரோவேமென் பவெல் 4ரன்கள் , லலித் யாதவ்2 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம் நிலைத்து ஆடிய வார்னர் அரைசதம் அடித்தார் .தொடர்ந்து அக்சர் படேல் அதிரடி காட்டினார் . பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்ட பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இறுதியில் 19.4 ஓவர்கள் முடிவில் 10விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி 172ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் , ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் இனைந்து சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய இவர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 71 ஆக இருந்த போது இஷான் கிஷன் 31 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.
அடுத்து வந்த திலக் வர்மா அதிரடி காட்டினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். தொடர்ந்து திலக் வர்மா 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து ரோகித் சர்மா 65 ரன்களில் வெளியேறினார்.
கடைசி 3 ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது அப்போது டிம் டேவிட் , கேமரூன் கிரீன் இருவரும் பவுண்டரி , சிக்ஸர் பறக்க விட்டனர். கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது.டெல்லி அணியின் நோர்ஜே வீசிய அந்த ஓவரில் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து மும்பை அணி முதல் வெற்றி பதிவு பெற்றது.