வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் ரோகித் சர்மா சதமடித்து அசத்தல்
இந்திய அணி தற்போதுவரை 81 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்துள்ளது.
டொமினிகா,
வெஸ்ட் இண்டீஸ்- இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரகளாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக தனது அறிமுக போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ஜெய்ஸ்வால், 215 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் சதம் அடித்து சாதனை படைத்தார்.
இதனை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். அவர் 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த சுப்மன் கில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி தற்போதுவரை 81 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்துள்ளது. அத்துடன் 95 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்வாலும், விராட் கோலியும் களத்தில் உள்ளனர்.