கால்பந்து அணியின் இணை உரிமையாளரானார் சஞ்சு சாம்சன்


கால்பந்து அணியின் இணை உரிமையாளரானார் சஞ்சு சாம்சன்
x

Image Courtesy: imsanjusamson

கேரளா சூப்பர் லீக் தொடரில் மலப்புரம் எப்.சி. கால்பந்து அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சஞ்சு சாம்சன் இணைந்துள்ளார்.

திருவனந்தபுரம்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் சஞ்சு சாம்சன். இவர் இந்திய அணிக்காக இதுவரை 16 ஒருநாள், 30 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். மேலும், இவர் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

167 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ள சாம்சன் 4419 ரன்கள் குவித்துள்ளார். இவரது தலைமையில் ராஜஸ்தான் அணி கடந்த 2022ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்று தோல்வி கண்டது. இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தடுமாறி வரும் சஞ்சு சாம்சன், கிடைத்த வாய்ப்புகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தான் சஞ்சு சாம்சன் கேரளா சூப்பர் லீக் என்ற தொடரில் மலப்புரம் எப்.சி. என்ற கால்பந்து அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சேர்ந்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.




Next Story