இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை- ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்


இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை- ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்
x

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டியில் விளையாடி வருகிறது.

கொழும்பு,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியை கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

அதன்படி முதல் டி20 கிரிக்கெட் போட்டியானது கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இதே மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.


Next Story