இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு


இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

கவுகாத்தி,

இந்தியா வந்துள்ள இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரையில், கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story