வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்; நியூசிலாந்து அணி அறிவிப்பு..!


வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்; நியூசிலாந்து அணி அறிவிப்பு..!
x

Image Courtesy : @BLACKCAPS twitter

வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெல்லிங்டன்,

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டிஎல்எஸ் முறையில் 44 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் டெவான் கான்வே, லாக்கி பெர்குசன், டாம் லாதமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்;

கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மார்க் சாம்ப்மென், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், நீஷம்., க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், பென் சீயர்ஸ், டிம் செய்பர்ட், இஷ் சோதி, டிம் சவுதி.


Next Story