வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்...காயம் காரணமாக நியூசிலாந்து அணியிலிருந்து முன்னணி வீரர்கள் விலகல்...!


வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்...காயம் காரணமாக நியூசிலாந்து அணியிலிருந்து முன்னணி வீரர்கள் விலகல்...!
x

Image Courtesy: @ICC

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

வெல்லிங்டன்,

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 ஆட்டங்களிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் டி20 தொடர் வரும் 27ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் 2 பேர் விலகி உள்ளனர்.

கேப்டன் கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன் ஆகியோர் விலகி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக அணியில் ரச்சின் ரவீந்திரா, ஜேக்கப் டப்பி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். வில்லியம்சன் இல்லாததால் கேப்டன் பொறுப்பை மிட்செல் சாண்ட்னெர் ஏற்க உள்ளார்.

வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்;

மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), பின் ஆலென், மார்க் சாம்ப்மென், ஜேக்கப் டப்பி, ஆடம் மில்னே, டேரில் மிட்செல், நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சீயர்ஸ், டிம் செய்பர்ட், இஷ ஷோதி, டிம் சவுதி.




Next Story