இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; நியூசிலாந்து அணி அறிவிப்பு...!
இங்கிலாந்து மற்றும் யுஏஇ அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் யுஏஇ-ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், அதன் பின்னர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.
இந்நிலையில் யுஏஇ மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தொடருக்குமான நியூசிலாந்து அணிக்கு டிம் சவுதி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், யுஏஇ தொடருக்கான அணியில் இளம் வீரர்களுக்கும், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு அனுபவம் மிக்க வீரர்களுக்கும் நியூசிலாந்து அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
யுஏஇ தொடருக்கான நியூசிலாந்து அணி:-
டிம் சவுதி (கேப்டன்), அதி அசோக், சாட் பொவ்ஸ், மார்க் சாம்ப்மென், டேன் க்ளீவெர், லாக்கி பெர்குசன், டீன் பாக்ஸ்ராப்ட், கைல் ஜேமிசன், கோல் மெக்கன்சி, ஜிம்மி நீஷம், ரச்சின் ரவிந்திரா, மிட்செல் சாண்ட்னெர், டிம் செய்பர்ட், ஹென்றி சிப்லே, வில் யங்.
இங்கிலாந்து தொடருக்கான நியூசிலாந்து அணி:
டிம் சவுதி (கேப்டன்), பின் ஆலென், மார்க் சாம்ப்மென், டெவான் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர், டிம் செய்பர்ட், இஷ் சோதி.