இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு...!
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரினிடாட்,
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவில் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இந்த தொடர் வரும் 3ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடருக்கான இந்திய அணி ஹர்த்திக் பாண்ட்யா தலைமையில் இளம் வீரர்களை கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித், கோலி, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷாய் ஹோப் மற்றும் ஓஷேன் தாமஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருநாள் தொடரில் இடம் பெறாத பூரன், ஹோல்டர் ஆகியோர் டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:
ரோவ்மன் பவல் (கேப்டன்), கைல் மேயர்ஸ் (துணை கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகெல் ஹோசைன், அல்ஜாரி ஜோசப், பிரண்டன் கிங், ஓபெட் மெக்காய், நிகோலஸ் பூரன், ரொமெரியோ ஷெப்பர்ட், ஓடேன் ஸ்மித், ஓஷேன் தாமஸ்.