டெஸ்ட் போட்டி: இலங்கை - அயர்லாந்துக்கு இடையே இன்று 2-வது நாள் ஆட்டம்


டெஸ்ட் போட்டி: இலங்கை - அயர்லாந்துக்கு இடையே இன்று 2-வது நாள் ஆட்டம்
x

இலங்கை - அயர்லாந்துக்கு இடையே டெஸ்ட் போட்டியின் இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

காலே,

இலங்கைக்கு சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் காலேயில் நேற்று தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 386 ரன்கள் குவித்தது.

தனது 15-வது சதத்தை எட்டிய கேப்டன் திமுத் கருணாரத்னே 178 ரன்களும் (235 பந்து, 15 பவுண்டரி), 8-வது சதம் அடித்த குசல் மென்டிஸ் 140 ரன்களும் (193 பந்து, 18 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story