பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் : 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 176/5


பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் : 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 176/5
x

Image Tweeted By @ICC  

3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.

காலே,

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 315 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள், இலங்கையின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். அதிகபட்சமாக அஹா சல்மான் 62 ரன்கள் எடுத்தார். ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 69.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது.

3-வது நாளான இன்று பாகிஸ்தான் அணி தொடர்ந்து ஆடியது. ரமேஷ் மெண்டிஸ் மற்றும் ஜெயசூர்யாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் 2-வது இன்னிங்சை இலங்கை அணி தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களா டிக்வெலா - பெர்ணாண்டோ களமிறங்கினர். டிக்வெல்லா 15 ரன்னிலும் பெர்ணான்டோ 19 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 15, மேத்யூஸ் 35, தினேஷ் சண்டிமால் 21 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். போதுமான வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Next Story