நல்லவேலை கே.எல். ராகுல் விளையாடவில்லை... கடவுளுக்கு நன்றி... விளையாடியிருந்தால் - இந்திய முன்னாள் கேப்டன் ருசிகர கருத்து


நல்லவேலை கே.எல். ராகுல் விளையாடவில்லை... கடவுளுக்கு நன்றி... விளையாடியிருந்தால் - இந்திய முன்னாள் கேப்டன் ருசிகர கருத்து
x
தினத்தந்தி 5 March 2023 8:45 PM IST (Updated: 5 March 2023 9:55 PM IST)
t-max-icont-min-icon

முதலில் கே.எல்.ராகுலுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழு முன்னாள் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 2 டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.

3-வது டெஸ்ட்டில் முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 197 ரன்கள் எடுத்தது. பின்னர், 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 1 விக்கெட் மட்டும் இழந்து 78 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.

3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றபோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது.

3வது டெஸ்ட்டில் இந்திய அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இப்போட்டியில் இந்திய தொடக்க வீரர் கேஎல் ராகுல் நீக்கப்பட்டு சுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

3-வது டெஸ்ட்டில் அணியில் கேஎல் ராகுல் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணி தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்த கருத்தில், முதலில் கே.எல்.ராகுலுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நல்லவேளை 3-வது டெஸ்ட்டில் கேஎல் ராகுல் விளையாடவில்லை. ஒருவேளை அவர் இந்த ஆடுகளத்தில் விளையாடி தோல்வியடைந்தால் அடுத்த 2 டெஸ்ட்களுடன் கேஎல் ராகுலின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும். வெளிப்படையாக கூறவேண்டுமானால் கடவுளுக்கு நன்றி அவர் விளையாடவில்லை.

இதுபோன்ற ஆடுகளங்களில் (இந்தூர் மைதானம்) பேட்டிங் ஆடுவது மிக கடினம். யார் பேட்டிங் செய்தாலும் விராட் கோலியாக இருந்தாலும் இந்த மைதானத்தில் ரன் எடுப்பது கடினம்' என்றார்.


Next Story