உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த அணிகள் தான் முன்னேறும் - சேவாக்
உலகக்கோப்பைத் தொடரில் எந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார் .
புதுடெல்லி,
இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27-ந்தேதி வெளியிடப்பட்டது. அக்.5-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
சொந்த மண்ணில் நடக்கும் இந்த உலகக்கோப்பையை வென்றுவிட வேண்டும் என்று இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறதுஇந்த நிலையில் இந்த உலகக்கோப்பைத் தொடரில் எந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் கூறியதாவது ,
என்னைப் பொறுத்தவரை இந்த முறை நிச்சயம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்தான் அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெறும். குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சிறப்பாக உள்ளன. காரணம் அவர்கள் வழக்கத்திற்கு மாறான ஷாட்களையும், தனித்துவமாகவும் விளையாடுகின்றனர் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார் .