இது என்னடா சி.எஸ்.கே-க்கு வந்த சோதனை ..! தோனி உள்ளிட்ட 5 முக்கிய வீரர்கள் காயம்..! ரசிகர்கள் கவலை
காயத்தை திடப்படுத்திக்கொண்டு அணியை தொடர்ந்து தோனி வழி நடத்துவார் என நாங்கள் நம்புகிறோம் என பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னி அணி 172 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சென்னை அணியில் 5 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.பென் ஸ்டோக்ஸ் , தீபக் சாஹர் ஆகியோர் காயம் ஏற்பட்டு போட்டிகளில் விளையாடாத நிலையில் , தற்போது கேப்டன் தோனி, சிசண்டா மகலா , சிமர்ஜீத் சிங் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர் . சென்னை அணியின் முக்கிய வீரர்கள் காயம் அடைந்திருப்பது சென்னை ரசிகர்களிடையியே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காயத்தை திடப்படுத்திக்கொண்டு அணியை தொடர்ந்து தோனி வழி நடத்துவார் என நாங்கள் நம்புகிறோம். போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அவர் கொண்டுள்ளார்" என பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
சென்னை அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்கிறது. இந்த போட்டி வருகிற 17-ந் தேதி சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.