டி.என்.பி.எல்.: நெல்லை அணிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது லைகா கோவை கிங்ஸ்


டி.என்.பி.எல்.: நெல்லை அணிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது லைகா கோவை கிங்ஸ்
x

image tweeted by @TNPremierLeague

கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இதில் இன்று நடைபெற்று வரும் 26 ஆவது லீக் ஆட்டத்தில் கோவை -நெல்லை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்ரீதர் ராஜுவும், சுரேஷ் குமாரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஸ்ரீதர் ராஜு 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். சிறப்பாக விளையாடிய சுரேஷ் குமார் 75 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

அடுத்து வந்த சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி 35 ரன்களை திரட்டினார். இறுதியில் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி விளையாடி வருகிறது.


Next Story