வங்காளதேச டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை : வெளியானது புதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை..!!


வங்காளதேச டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை : வெளியானது புதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை..!!
x

Image Courtesy : Twitter @ICC 

இலங்கை - வங்காளதேச டெஸ்ட் தொடருக்கு பிறகான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

துபாய்,

வங்காளதேச மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் டிரா-வில் முடிய 2-வது போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி இன்று அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கு பிறகான வங்காளதேச - இலங்கை டெஸ்ட் தொடருக்கு பிறகான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

இன்று வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணியை பின்னுக்குத்தள்ளி இலங்கை அணி 4-வது இடத்தை பிடித்துள்ளது. 55 சதவீத வெற்றியுடன் இந்த பட்டியலில் இலங்கை 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் 75 சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், 71.43 சதவீதத்துடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இடத்திலும் உள்ளது.

இந்த பட்டியலில் 58.33 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகள் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.


Next Story