ஐ.பி.எல்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது களத்தில் கோபம் அடைந்த டோனி !


ஐ.பி.எல்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது  களத்தில் கோபம் அடைந்த டோனி !
x

களத்தில் எவ்வளவு பரபரப்பு இருந்தாலும் டோனி அதை எந்த வித டென்ஷனும் இன்றி ‘கூல்’ ஆக கையாள்வதற்கு பெயர் போனவர்.

பெங்களுரு,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 7 போட்டிகளில் விளையாடி 5 ல் வெற்றி 2 தோல்விகள் என 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

சென்னை அணி இந்த சீசனில் வலுவான பேட்டிங்கை கொண்டுள்ளது. அதுபோக சென்னை அணியின் கேப்டன் டோனியின் கேப்டன்ஷிப் திறனும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. களத்தில் எவ்வளவு பரபரப்பு இருந்தாலும் டோனி அதை எந்த வித டென்ஷனும் இன்றி 'கூல்' ஆக கையாள்வதற்கு பெயர் போனவர்.

ஆனால், கடந்த 17 ஆம் தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனி களத்தில் கோபம் அடைந்து சக வீரரை கடிந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் டோனி களத்தில் வீரரை கடிந்து கொண்டதை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story