டோனியின் பைக், கார் சேகரிப்பை பார்த்து மிரண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்...! சாக்ஷி கேட்ட கேள்வி


டோனியின் பைக், கார் சேகரிப்பை பார்த்து மிரண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்...! சாக்ஷி கேட்ட கேள்வி
x
தினத்தந்தி 18 July 2023 1:14 PM IST (Updated: 18 July 2023 1:26 PM IST)
t-max-icont-min-icon

டோனி தனக்கு பிடித்த விருப்பமான பைக்குகள், கார்களை சேகரித்து வைத்துள்ளார்.

ராஞ்சி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி ராஞ்சியில் தனது வீட்டில் பைக், கார்களை சேகரித்து வைத்துள்ளார். தனக்கு பிடித்த பைக்குகள், கார்களை சேகரித்து நிறுத்தி வைக்க தனியே குடோன் போன்று தனி பட்டறையை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த கார், பைக் சேகரிப்பு பட்டறை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், முன்னாள் வீரர் சுனில் ஜோஷி நேரில் பார்வையிட்டனர். அப்போது, டோனியும் அவரது மனைவி சாக்ஷியும் உடன் இருந்தனர்.

அப்போது, டோனி வைத்துள்ள பைக்குகள், கார்களை பார்வையிட்ட வெங்கடேஷ் பிரசாத் அது தொடர்பான வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஒரு பொருள் மீது இத்தனை மோகம் கொண்ட நபரை நான் இப்போது தான் பார்க்கிறேன். எவ்வளவு அருமையான சேகரிப்பு. அற்புதமான மனிதர் தோனி. சிறந்த சாதனையாளர் மற்றும் சிறந்த மனிதர், ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் அவர் சேகரித்து வைத்துள்ள பைக்குகள், கார்களின் தொகுப்பு தான் இது. இந்த மனிதரையும், பைக் கார் மீது அவர் கொண்ட மோகத்தையும் கண்டு வியக்கிறேன்' என்றார்.

வீடியோவில் டோனியின் மனைவி சாக்ஷி கூறுகையில், நான் என்ன பேசுவது? ராஞ்சிக்கு முதல் முறையாக வருவதை எவ்வாறு உணருகிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பிரசாத், சிறப்பாக உள்ளது. நான் ராஞ்சிக்கு வருவது இது 4வது முறை. ஆனால் இந்த இடம் (டோனியின் பைக் பட்டறை) மிகவும் முட்டாள்தனம் (crazy) வாய்ந்தது. இத்தனை பைக்குகளை வைத்துக்கொள்ள நீங்கள் முட்டாள்தனம் வாய்ந்தவராகத்தான் இருக்க வேண்டும்.

இது பைக் ஷோரூமாக இருக்கலாம். ஒரு நபர் மிகவும் அதிபயங்கர மோகம் இருந்தால் மட்டுமே இதுபோன்று அமைக்க முடியும் என நான் கூறுகிறேன். ஒருவருக்கு அதிக முட்டாள்தனம் இருந்தால் மட்டுமே இத்தனை பைக்குகளை சேகரிக்க முடியும்' என்றார்.

அப்போது, டோனியின் மனைவி சாக்ஷி , இதை நான் முட்டாள்தனம் என்பேன்' என்றார். மேலும், ஏன் மஹி? இத்தனை பைக்குகளுக்கான தேவை என்ன என்று சாக்ஷி தனது கணவர் டோனியிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த டோனி, ஏனென்றால் நீங்கள் என்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துவிட்டீர்கள். எனக்கு சொந்தமாக எதேவது தேவை. இதை மட்டும் தான் நீங்கள் அனுமதிக்கிறீர்கள்' என்றார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.




Next Story