விராட் கோலி , டு பிளசிஸ் அரைசதம்..! 175ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு


விராட் கோலி , டு பிளசிஸ் அரைசதம்..! 175ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு
x

இதனை தொடர்ந்து 175ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடுகிறது.

மொகாலி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொகாலியில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி பெங்களூரு முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. பெங்களுரு அணியின் கேப்டனாக இன்று விராட் கோலி செயல்படுகிறார். டு பிளசிஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார்.

தொடக்க வீரர்களாக விராட் கோலி , டு பிளசிஸ் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடினர். பந்துகளை , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். தொடர்ந்து ஆடிய டு பிளசிஸ் , விராட் கோலி இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

தொடக்க விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில் விராட் கோலி 47 பந்துகளில் 59ரன்களுக்கு வெளியேறினார்.

அடுத்து வந்த மேக்ஸ்வெல் அடுத்த பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டு பிளசிஸ் 56 பந்துகளில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு 174ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 175ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடுகிறது.


Next Story