தென் ஆப்பிரிக்கா திரும்பினார் விராட் கோலி - நாளைய போட்டியில் பங்கேற்கிறார்...!


தென் ஆப்பிரிக்கா திரும்பினார் விராட் கோலி - நாளைய போட்டியில் பங்கேற்கிறார்...!
x

image courtesy; AFP

தினத்தந்தி 25 Dec 2023 10:54 AM IST (Updated: 25 Dec 2023 10:57 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விராட் கோலி குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 22ஆம் தேதி அன்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பினார். இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று தகவல் வெளியாகி இருந்தது .

அதன்படி அவர் மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு திரும்பி இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அங்கு சக வீரர்களுடன் சேர்ந்து தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.


Next Story